தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2022 8:24 PM IST (Updated: 1 March 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

தனியார் கம்பெனியில் இருந்து தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து 22 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 158 ஒப்பந்த தொழிலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஜெய்ஸ், கார்த்திக், கருப்பையா, ஆதிகேசவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி யோகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஐ.டி.யூ.சி.யின் பொது செயலாளர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கஜேந்திரன், நுங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டு பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் மீண்டும் பணி வழங்கும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.


Next Story