முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியாக குறைந்தது
நீர்வரத்து இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடியாக குறைந்தது.
கூடலூர்:
தமிழக-கேரள மாநில எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி கடந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைந்தது. மேலும் அணையில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 128.60 அடியாக குறைந்தது.
அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 108 கனஅடியாக இருந்தது. இந்தநிலையில் நேற்று நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story