‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 March 2022 8:41 PM IST (Updated: 1 March 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


குப்பை சேகரிப்பு 

தேனி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சி சவளபட்டியில் கடந்த சில நாட்களாக முறையாக குப்பைகள் சேகரிக்கப்படவில்லை. இதனால் குப்பைகள் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே குப்பைகளை தினமும் சேகரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -எத்திராஜ், வெங்கடாசலபுரம்.

பயன்பாட்டில் இல்லாத மின்இணைப்பு 

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை பகுதியில் ஒருசில ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் இல்லை. ஆனால் அதற்கான மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கிறது. எனவே, பயன்பாட்டில் இல்லாத மின்இணைப்பை துண்டிக்க வேண்டும். -லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.

சேதம் அடைந்த சாலை 

அய்யலூரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டியில் இருந்து புத்தூருக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, அய்யலூர்.

குப்பை குவியல் 

கொடைக்கானல் நாயுடுபுரம் ராமசாமிபுரத்தில் டிரான்ஸ்பார்மர் அருகே மெயின்ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளை அகற்ற வேண்டும். -சந்தோஷ், கொடைக்கானல்.

தூர்வாராத சாக்கடை கால்வாய்

திண்டுக்கல் நாகல்புதூரில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் சில இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -ராஜேஷ், திண்டுக்கல்.

Next Story