கள்ளக்குறிச்சியில் நடந்த அ தி மு க நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் திடீர் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் நடந்த அ தி மு க நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் திடீர் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக நகர, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளர் பாபு, முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு மற்றும் நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக செயல் பட்டுள்ளனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சிக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகளின் பெயரை எழுதி கொடுங்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக குமரகுரு கூறினார்.
இந்த நிலையில் தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் அய்யப்பா மாவட்ட செயலாளரிடம் நீங்கள் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எனவே நான் ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி தொண்டனாக பணியாற்றுகிறேன் என கூறி தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவரை கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story