சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு


சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 1 March 2022 10:22 PM IST (Updated: 1 March 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை, 
மதுரை திருமங்கலம் ராஜீவ்காந்தி நகரைச்சேர்ந்த விஜயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஆட்டோ டிரைவராக உள்ளேன். வீடு கட்டுவதற்காக பெற்ற கடன் தொகை ரூ.30 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளேன். இதனால் வீட்டை விற்று அனைத்து கடனையும் அடைத்துவிடுவது என முடிவு செய்தேன். இந்தநிலையில் திருமங்கலத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். தற்போது கடன் தொகையை வட்டியுடன் செலுத்துமாறு கூறி, எனது வீட்டிற்குள் சட்டவிரோதமாக புகுந்து கொண்டனர். அங்கிருந்த எங்களின் பொருட்களை வெளியில் வீசிவிட்டனர். எனது வீட்டை விலைக்கு வாங்க வருபவர்களையும் தடுத்து விரட்டிவிடுகின்றனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்ய சென்றேன். ஆனால் திருமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணன், எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கொடு, இல்லையென்றால் வீட்டை எதிர்தரப்பினருக்கு எழுதிக்கொடுத்துவிடு என மிரட்டி, எதிர்தரப்பினருக்கு ஆதரவாக உள்ளார்.
எனவே சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, எனது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசார ணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Next Story