பராம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு போட்டி


பராம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு போட்டி
x
தினத்தந்தி 1 March 2022 11:51 PM IST (Updated: 1 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் பராம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் அரக்கோணம் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பராம்பரிய சிறு தானிய உணவு தயாரிப்பு போட்டி நாகாலம்மன் நகரில் நடைபெற்றது.

திட்ட இயக்குனர் நானிலதாசன் தலைமை தாங்கினார். பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு கேழ்வரகு அடை, பாசி பருப்பு பாயாசம், சிவப்பு அரிசி புட்டு, கேழ்வரகு இடியாப்பம், அவல் வடை, எள்ளு சிம்லி, கம்பு குழி பணியாரம், கேழ்வரகு கட்லெட், சத்து மாவு கேக், பிரண்டை துவையல், கொள்ளு அவல் கஞ்சி, உளுந்து பனைவெல்லம் கஞ்சி, எள் உருண்டை உள்ளிட்ட பல வகை உணவுகளை தயாரித்து வைத்திருந்தனர். 

மாநில ஊரக வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் தராகேஸ்வரி மூர்த்தி, தணிகைபோளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் முதல் இடம் பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்கள்.

Next Story