பட்டதாரி இளைஞர்களுக்கு அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளர்.
ராணிப்பேட்டை
மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 மீனவ இளைஞர்கள் போட்டி தேர்விற்கான பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் 20 மீனவ இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பினால் www.fisherless.tn.gov.in என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறியலாம்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story