புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு குறைந்தது


புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 2 March 2022 12:21 AM IST (Updated: 2 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 5-க்கும் கீழே உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக தொற்று பாதித்திருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 8 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகினர். மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50-க்கும் கீழே குறைந்தது. தற்போது 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

Next Story