லாரி டிரைவர் திடீர் சாவு


லாரி டிரைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 1 March 2022 7:18 PM GMT (Updated: 2022-03-02T00:48:09+05:30)

திசையன்விளை அருகே லாரி டிரைவர் திடீரென்று இறந்தார்.

திசையன்விளை:

வத்தலகுண்டு செல்லத்தான் பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 55). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து அவருக்கு சொந்தமான லாரியில் கோழி தீவனங்களை ஏற்றி வந்தார். உவரியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் தீவனங்களை இறக்கி கொண்டு இருந்தபோது திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உவரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து வெள்ளைச்சாமி உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story