கார் விற்பனையில் ரூ.5.38 லட்சம் மோசடி


கார் விற்பனையில் ரூ.5.38 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 March 2022 12:51 AM IST (Updated: 2 March 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கார் விற்பனையில் ரூ.5.38 லட்சம் மோசடி செய்ததாக ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் ரமீஷ் ராஜா (வயது 34). இவர் நெல்லையில் உள்ள ஒரு கார் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் வாடிக்கையாளர்களுக்கு கார் விற்பனை செய்ததில் ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்தை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஷோரூம் மேலாளர் மாரிமுத்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், ரமீஷ் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story