போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தாயாருடன் பெண் திடீர் தர்ணா
கணவர், குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தாயாருடன் பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்
கணவர், குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தாயாருடன் பெண் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் தர்ணா
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை பாரதிநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் என்பவரின் மனைவி நித்யா (வயது 23). நர்சிங் படித்துள்ள இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அவர் கூறியதாவது:-
நானும் குலசேகரக்கால் பகுதியை சேர்ந்த நவீன்குமார்(26) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமநாதபுரம் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். அதுமுதல் என்னுடன் வாழாமல் புறக்கணித்து வருகிறார். என்னுடன் வாழ வேண்டும் என்றால் 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரமும் தர வேண்டும் என கொடுமைப்படுத்தினார்.
நடவடிக்கை இல்லை
இதற்கு கணவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் குமாரி, தங்கை ஹரிதா ஆகியோர் உடந்தையாக உள்ளனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை சமாதானபடுத்தி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி மற்றும் ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story