வகுப்பறை ஓட்டுக்கூரையில் இருந்து மரக்கட்டை விழுந்து 3 சிறுவர்கள் காயம்


வகுப்பறை ஓட்டுக்கூரையில் இருந்து  மரக்கட்டை விழுந்து 3 சிறுவர்கள் காயம்
x
தினத்தந்தி 2 March 2022 12:59 AM IST (Updated: 2 March 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

வகுப்பறை ஓட்டுக்கூரையில் இருந்து மரக்கட்டை விழுந்து 3 சிறுவர்கள் காயம்

சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 45 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு இரண்டு கட்டிடங்கள் உள்ளன. அதில் ஒன்று ஓட்டுக்கூரை கட்டிடம்.  இந்த கட்டிடத்தில் 1 முதல் 3 வரையுள்ள வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டிடத்தை இடிப்பதற்கு எஸ்.வாகைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வடமலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அக்கட்டிடம் இடிக்கப்படாமல் பள்ளி செயல்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர். அப்போது, ஓட்டுக்கூரையில் இருந்த ரீப்பர் மரக்கட்டை ஒன்று திடீரென கீழே விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகளின் மேலே நேரடியாக விழாமல் சுவரில் பட்டு திரும்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரக்கட்டை விழுந்ததில் 4-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி, 2-ம் வகுப்பு படிக்கும் மாணிக்கம், அகிலேஷ் கண்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த சிறுவர்களை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story