சிவகாசி மாநகராட்சி கூட்ட அரங்கம் தயார்
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தின் 2-வது மாடியில் தயாராகி வரும் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று 48 கவுன்சிலர்கள் பதவி ஏற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தின் 2-வது மாடியில் தயாராகி வரும் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று 48 கவுன்சிலர்கள் பதவி ஏற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பதவி ஏற்பு
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 48 கவுன்சிலர்களுக்கும் இன்று பதவி ஏற்பு விழா மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள 2-வது மாடியில் காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களாக இரவு-பகலாக மாமன்ற கூட்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேயருக்கான இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மாமன்ற கூட்ட அரங்கு அமைக்கும் பணியாளர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அனுமதி இல்லை
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட நபர்களை மட்டும் விழாவில் அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விழாவுக்கு வரும் கவுன்சிலர்களின் உறவினர்கள் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் அமைக்கப்படும் ராட்சத பந்தலில் அமர்ந்து டி.வி.யில் நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படும் பதவி ஏற்பு விழாவை பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்ற அரங்கிற்குள் கவுன்சிலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மட்டும் அனுமதிக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வரும் கவுன்சிலர்கள் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு இறங்கி விட்டு தங்களது வாகனங்களை வேறு பகுதியில் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story