கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


கோவில்பட்டி  செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 2 March 2022 1:40 AM IST (Updated: 2 March 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது

கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நந்தியம்பெருமாள், பூவனநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்கசாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story