அதிகபாரம் ஏற்றி வந்த 9 லாரிகள் பறிமுதல்
தக்கலை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பத்மநாபபுரம்:
குமரி மாவட்டத்தில் லாரிகளில் ஜல்லி, எம்சாண்ட், கருங்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிக அளவில் எடுத்து செல்லப்படுவதால், சாலைகள் சேதமடைந்து காணப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை அழகியமண்டபம், முளகுமூடு, தக்கலை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக அதிகபாரம் ஏற்றி வந்த 9 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றுக்கு ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story