ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி பந்தயம்


ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 2 March 2022 2:09 AM IST (Updated: 2 March 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

சிவராத்திரியையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீைவகுண்டம் அருகே சிவராத்திரியையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
மாட்டு வண்டி பந்தயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலசிரியந்தூர் கிராமத்தில் சிவகாமி அம்பாள் சமேத புரவரி ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாட்டு வண்டி போட்டியில் 6 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார். போட்டிக்கான எல்லை மேலசிரியந்தூரில் இருந்து தெற்கு காரசேரி வரை 8 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 
போட்டியில் முதல் பரிசை வள்ளியூரை சேர்ந்த ஆனந்த் என்பவர் மாடும், 2-வது பரிசை ஓட்டப்பிடாரம் சரண்யா குட்டியும், 3-வது பரிசை சீவலப்பேரியைச் சேர்ந்த துர்காம்பிகா மாடும் வென்றன.
பரிசு
17 சிறிய மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட போட்டியை செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தொடங்கி வைத்தார். போட்டிக்கு மேலசிரியந்தூரில் இருந்து அரசர்குளம் பஸ் நிலையம் வரை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வள்ளியூரைச் சேர்ந்த ஆனந்தும், 2-வது பரிசை வல்லநாடு பங்களா மாடும், 3-வது பரிசை கயத்தாறு காந்திராஜ் மாடும் வென்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story