தனி லிங்கபெருமாள் கோவிலில் நேர்த்திக்கடன் நாடகம்
திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் உள்ள தனி லிங்கபெருமாள் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திகடனாக 35 நாட்கள் நாடகம் நடத்து கிறார்கள். ஒவ்வொரு நாளும் விடிய, விடிய நாடகம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் உள்ள தனி லிங்கபெருமாள் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திகடனாக 35 நாட்கள் நாடகம் நடத்து கிறார்கள். ஒவ்வொரு நாளும் விடிய, விடிய நாடகம் நடக்கிறது.
தனி லிங்கபெருமாள்
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வலையங்குளத்தில் பிரசித்திபெற்ற தானாக முளைத்த தனிலிங்க பெருமாள் கோவில் உள்ளது. தனிலிங்க பெருமாளை வந்து வழிபட்டாலே கைமேல் பலன் உண்டு என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக நிலவுகிறது. மற்ற தெய்வங்களுக்கு கிடா வெட்டுதல் முடி காணிக்கை செலுத்துதல், அங்க பிரதட்சணம் செய்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் என்று நீண்ட பட்டியலாக பல்வேறு நேர்த்திகடனை செலுத்தி வருகிறார்கள்
நாடகங்கள்
ஆனால் தானா முளைத்த தனி லிங்கபெருமாள் கோவிலில் நேர்த்திகடனாக பக்தர்கள் "நாடகங்கள்" நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். கோவில் உருவான காலம் தொட்டு இன்றுவரை நேர்த்தி கடனுக்காக நாடகம் நடத்துவதுதான் தனி சிறப்பாக இருந்து வருகிறது. நாடகம் நடத்துவதற்கு என்று கோவிலின் எதிர்புறமுகமாக நாடக அரங்கம் தனியாக அமைந்து இருப்பதும் விசேஷமாகும். நேர்த்தி செலுத்துவதற்காக கோவிலில் முன்பதிவு செய்வது வழக்கமாகும்.
மாசி மாதத்தில் மகாசிவராத்திரி நாள் முதல் தினமும் பக்தர்கள் தங்களது நேர்ச்சையை செலுத்தி வந்துள்ளனர். தனி லிங்கபெருமாளே நாடகத்தை கண்டுகளிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். கடந்தகாலங்களில் 2 மாதத்திற்கு மேலாக தினமும் நாடகம் நடந்துவந்துள்ளது. வலையங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் விடிய, விடிய நாடகம் பார்த்துள்ளனர்.
தூங்கா கிராமம்
இதனையொட்டி மதுரை மாநகரை தூங்காநகரம் என்பது போல தூங்கா கிராமம் என்று வலையங்குளத்திற்கு சிறப்பு பெயர் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் கொரோனா பரவலால் உருவான ஊரடங்கின் காரணமாக நேர்த்திகடன் நாடகம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டில் 35 நாட்கள் தினமும் ஒரு நாடகம் நடத்த பக்தர்கள் முன்வந்து கோவில் நிர்வாகத திடம் பதிவு செய்துள்ளனர். இதனையொட்டி முதல் நாளான நேற்று நேர்த்திகடன் நாடகம் நடந்துள்ளது. இதேபோல வருகிற 34 நாட்கள் தொடர்ந்து தினமும் நாடகம் நடக்கிறது.
Related Tags :
Next Story