தலைவர் பதவியை பிடிக்க முனைப்பு காட்டும் பா.ஜனதா
தென்தாமரைகுளத்தில் தலைவர் பதவியை பிடிக்க பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அதன் முடிவு காங்கிரஸ் கவுன்சிலரின் கையில் தான் உள்ளது.
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளத்தில் தலைவர் பதவியை பிடிக்க பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அதன் முடிவு காங்கிரஸ் கவுன்சிலரின் கையில் தான் உள்ளது.
தென்தாமரைகுளம் பேரூராட்சி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதே சமயம் பா.ஜனதாவும் அதிக இடங்களை கைப்பற்றி தலைவர் பதவிக்கு தகுதியாக உள்ளது. அதில் தென்தாமரைகுளம் பேரூராட்சியும் அடங்கும்.
பா.ஜனதா
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் பா.ஜனதா மற்றும் சுயேச்சைகள் தலா 4 வார்டுகளையும், தி.மு.க. 3 வார்டுகளையும், அ.தி.மு.க. 3 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு வார்டையும் கைப்பற்றின.
தலைவர் பதவி
தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. பா.ஜனதா-அ.தி.மு.க.வுடன் இணைந்து தலைவர் பதவியை சந்திக்கும் போது, மேலும் ஒரு கவுன்சிலரின் ஆதரவு இருந்தால் போதும்.
இந்த நிலையில் தி.மு.க. சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேரின் ஆதரவை பெற்று உள்ளனர். காங்கிரஸ் கவுன்சிலரின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று தி.மு.க.வினர் நம்பி இருந்தனர். ஆனால் காங்கிரஸ் கவுன்சிலரின் ஆதரவு யாருக்கு என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.
அதே சமயம் பா.ஜனதா பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதனால் காங்கிரஸ் கவுன்சிலரின் வாக்கை பெற்று தலைவர் பதவியை பிடிக்க போவது தி.மு.க.வா? அல்லது பா.ஜனதாவா? என்பது நாளை மறுநாள் தெரிய வரும்.
Related Tags :
Next Story