சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேர் மீது வழக்கு
சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சேலம்:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறி, அதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ. உள்பட 12 பேர் மீது சட்டவிரோதமாக ஒரே இடத்தில் கூடுதல், சாலையை மறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story