11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வளர்ப்பு தந்தை கைது
வேலியே பயிரை மேய்ந்த கதையாக 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கமகளூரு: வேலியே பயிரை மேய்ந்த கதையாக 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2-வது திருமணம்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் அருகே கடுபுகெரே கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அந்த பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து மகள்களுடன் தனியே வசித்து வந்தார். அவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அதேப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண், கிருஷ்ணனை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர், தனது 2 மகள்கள் மற்றும் கிருஷ்ணனுடன் வசித்து வந்தார்.
பாலியல் பலாத்காரம்
தனது மகள்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து கிருஷ்ணனின் அரவணைப்பில் தனது மகள்களை விட்டுவிட்டு அந்த பெண் வேலைக்கு சென்று வந்தார். ஆனால், தந்தையாக இருந்து பாதுகாக்க வேண்டிய கிருஷ்ணன், அந்த பெண்ணின் மூத்த மகளான 11 வயது சிறுமியிடம் தனது காமலீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார்.
அதாவது, அந்த பெண் வீட்டில் இல்லாத நேரத்தில், மகள் முறை கொண்ட 11 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி, தனது தாயிடம் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கிருஷ்ணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 11 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
தாய் மீது தாக்குதல்
ஆனால், இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளாள். பாதுகாப்பாக இருக்க வேண்டிய வளர்ப்பு தந்தையே மகளை பலாத்காரம் செய்ததை கேட்டு அந்த ெபண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணனிடம் கேட்டு அந்த ெபண் தகராறு செய்துள்ளார். இதனால், கிருஷ்ணன் அந்த பெண்ணையும் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து பாலேஒன்னூர் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
போக்சோவில் கைது
இதையடுத்து போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னா் அவரை கோாட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’, பாதுகாப்பாக இருக்க வேண்டிய வளர்ப்பு தந்தையே, மகளை பலாத்காரம் செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story