மகாசிவராத்திரியையொட்டி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்- பவானிசாகர் அருகே வினோத வழிபாடு
மகாசிவராத்திரியையொட்டி பவானிசாகர் அருகே கோவிலில் பக்தர்கள் தனக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு செய்தனர்.
பவானிசாகர்
மகாசிவராத்திரியையொட்டி பவானிசாகர் அருகே கோவிலில் பக்தர்கள் தனக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு செய்தனர்.
மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோவில்
பவானிசாகர் அணை நீர்தேக்கம் அருகே உள்ள கிராமம் அய்யம்பாளையம். இந்த கிராமத்தில் குரும்பகவுண்டர் சமூகத்தின் குலதெய்வமான தொட்டம்மா சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியன்று பக்தர்கள் தங்களுக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், கோவிந்தபாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு செல்வர்.
நேர்த்திக்கடன்
அதன்படி இந்த ஆண்டு அய்யம்பாளையம் கிராமத்தில் மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி கோவிலில் நேற்று சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யயப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் தாரை தப்பட்டை முழங்க 3 கோவில்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பக்தர்கள் எடுத்து கோவிலுக்கு வெளியே வந்து தங்களுடைய தலையில் தாங்களே உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் விழாவில் கோவில் பூசாரி சாட்டையால் தனக்குத்தானே அடித்துக்கொண்டு வேல் கம்பை எடுத்து ஆடிய காட்சி அங்கிருந்த பக்தர்களை பக்தி பரவசப்படுத்தியது. இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story