பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு


பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 2 March 2022 9:54 AM IST (Updated: 2 March 2022 9:54 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல்:-
புதுச்சத்திரம் அருகே பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
டிராக்டர் டிரைவர் சாவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது42). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று காலை டிராக்டரில் களங்காணி பகுதியில் இருந்து மரவள்ளி கிழங்கு திப்பிகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
இந்த டிராக்டர் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென டிராக்டரின் பின்பகுதியில் மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பெருமாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்சில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
2 பேர் படுகாயம்
இதேபோல் இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் சந்தோஷ்குமார் (44), திருநெல்வேலியை சேர்ந்த ஜெயசுதா (36) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் மேலும் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பெருமாளின் மனைவி தேவி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story