அ.தி.மு.க.வினர் 2,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வினர் 2,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரம்பூர்,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில்அ.தி.மு.க. சார்பில் கண்டன போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த நிலையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ. விருகை ரவி, அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட 2,500 பேர் மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், சட்டவிரோதமாக கூடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரப்பக்கூடிய கவனக் குறைவான செயலில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் மற்றும் அனுமதியின்றி பேனர் வைத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வடக்கு கடற்கரை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story