தார் சாலை அமைக்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
கும்மிடிப்பூண்டியில் தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பூபால் நகர் குடியிருப்பில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழுயுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தார் சாலைகள் அமைக்க கோரி அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேர் குடியிருப்பு சங்க செயலாளர் செந்தில் குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராசனிடம் கோரிக்கை மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story