வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டம்
வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டம்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீரக்குமாரசாமி கோவில்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மாசி மாகா சிவராத்திரி திருவிழா கடந்த மாதம் 14ந் தேதி தேர் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் 23ந்தேதி தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் தேர் நிலை பெயர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று மாலை 5 அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தேரோட்டம், திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிறகு சுவாமி தேர்பவனி, தேவஸ்தான மண்டப கட்டளையும்
அதைத்தொடர்ந்து 4ந் தேதி முதல் 16ந் தேதி வரை கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது.
செல்லாண்டியம்மன்
பெரிய தேரில் வீரக்குமாரசாமியும், வீரபாகு எழுந்தரளினர். சின்ன தேரில் செல்லாண்டியம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் வீரக்குமரனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் கோவில் குலத்தவர்கள், முதன்மை தாரர்கள் நற்பணி மன்றத்தினர், முன்னாள் அறங்காவலர்கள், அறநிலையத்துறையினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story