பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது ரூ.23 ஆயிரம்- 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது  ரூ.23 ஆயிரம்- 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2022 12:15 AM IST (Updated: 2 March 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.23 ஆயிரம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.23 ஆயிரம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

சூதாட்டம்

வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமம் திரவுபதை அம்மன் கோவிலுக்கு பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். 
போலீசாரை கண்டதும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். 4 பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கருப்பம்புலத்தை சேர்ந்த பாண்டியன் (வயது35), சரவணன் (38), பாரதிகுமார் (35), அருள்முருகன் (35) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து சூதாட்ட களத்தில் கிடந்த ரூ.23 ஆயிரம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய ஓடி 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story