கோத்தகிரியை சேர்ந்த மாணவர், மாணவியை மீட்க வேண்டும்


கோத்தகிரியை சேர்ந்த மாணவர், மாணவியை மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 2 March 2022 7:59 PM IST (Updated: 2 March 2022 7:59 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோத்தகிரியை சேர்ந்த மாணவர், மாணவியை மீட்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோத்தகிரி

உக்ரைனில் சிக்கி தவிக்கும் கோத்தகிரியை சேர்ந்த மாணவர், மாணவியை மீட்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ரஷியா போர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா கொணவக்கரை அருகே டேன்டீஹல்லா பகுதியை சேர்ந்தவர் சார்லி ஜான்சன் மெடி. இவருடைய மனைவி லிசி. இவர்களது மகள் ஜோஸ்லின் சேர்லின். இவர் உக்ரைனில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். 

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. இரு தரப்பு ராணுவ வீரர்களும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மாணவி ஜோஸ்லின் சேர்லின் தவித்து வருகிறார்.

ரெயிலில் பயணம்

மேலும் செல்போன் மூலம் தனது பெற்றோரை தொடர்பு கொண்ட அவர் கூறும்போது, சொந்த நாட்டுக்கு திரும்ப நான் உள்பட 600 இந்தியர்கள் போலந்து வந்து உள்ளோம். எங்களை விரைந்து மீட்க வலியுறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதேபோன்று ஜெகதளா அருகே அருவங்காட்டை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் லலித்குமார், உக்ரைனில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவர் எல்லை பகுதிக்கு செல்வதற்காக ரெயிலில் பயணம் செய்து வருவதாகவும், அங்கு செல்ல சுமார் 30 மணி நேரம் தேவைப்படுவதாகவும், தன்னுடன் 60 இந்திய மாணவர்கள் உள்ளதாகவும் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்து உள்ளார். 

கோரிக்கை

இதன் காரணமாக உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது குழந்தைகளை மீட்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர் மத்திய, மாநில அரசுகளுக்கு கேரிக்கை விடுத்து உள்ளனர். 

இதற்கிடையில் உக்ரைனில் 5-வது ஆண்டு மருத்துவம் படித்து வந்த கோடநாடு அருகே கேரடாமட்டம் பகுதியை சேர்ந்த மணியன் என்பவரது மகன் சரண் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story