அஞ்சல் சேமிப்பு கணக்கில் ரூ3 லட்சம் கையாடல் செய்த அலுவலர் மீது வழக்கு
அஞ்சல் சேமிப்பு கணக்கில் ரூ3 லட்சம் கையாடல் செய்த அலுவலர் மீது போலீசார் வழக்கு செய்துள்ளனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியில் தபால் நிலைய கிளை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கிருஷ்ணகிரி அருகே உள்ள போகனப்பள்ளியை சேர்ந்த பெருமாள் மகன் ராமச்சந்திரன் என்பவர் அஞ்சல் அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் 2014 முதல் 2020-ம் ஆண்டு வரை 33 அஞ்சல் சேமிப்பு கணக்குகளில் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 344-ஐ கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஓசூர் உட்கோட்ட உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் கணேசன் விசாரணை நடத்தினார். அப்போது ராமச்சந்திரன் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 344 கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 187-ஐ திரும்ப செலுத்தினார். ஆனால் மீதமுள்ள ரூ.86 ஆயிரத்து 157-ஐ திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் கணேசன் கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story