கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் நேற்று அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்று கொண்டனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 கவுன்சிலர்களும், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் பதவி ஏற்றனர். கவுன்சிலர்களுக்கு நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அனைத்து கவுன்சிலர்களும் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்று கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செங்குட்டுவன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், நகர செயலாளர் நவாப், அ.தி.மு.க. நகர செயலாளர் கேசவன், தி.மு.க. நிர்வாகிகள் டேம்.வெங்கடேசன், நாராயணமூர்த்தி, அஸ்லம், திருமலைசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். (வெள்ளிக்கிழமை) நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story