விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி ஈழவளவன் தலைமை தாங்கினார். கோபாலசமுத்திரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் நிர்வாகிகள் சிவகுமார், பாரதிராஜா, பாபு, ரகுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சதீஷ் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி ஈழவளவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெப்பத்தூர் ராஜ்குமார், மாவட்ட நிர்வாகி சாமி ஜீசஸ், வக்கீல் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி விளாகம் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடனே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் டேவிட்வசந்தராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சீர்காழி தாசில்தார் சண்முகத்திடம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
Related Tags :
Next Story