நாமக்கல்லில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:
இலக்கை அடைய முடியாத கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் அஞ்சலக கோட்ட அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சக்திவேல், பொருளாளர் நித்யானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அலுவலக பணி நேரங்களில் நெட்ஒர்க், சர்வர் பிரச்சினையால் அன்றாட பணிகளை செய்திட முடியாமலும், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வழங்க முடியாமலும் இருப்பதை உடனடியாக நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் கோட்டத்தில் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி விரைவாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story