சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினார்.
மயிலாடுதுறை:
கடந்த 25-ந் தேதி மயிலாடுதுறை அருகே நீடூர் ரெயில்வே கேட் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? விபத்தில் இறந்தாரா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது. இந்த நிலையில் அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டார் என்று தனிப்படை போலீசார் கண்டறிந்து விரைவாக குற்றவாளியை கைது செய்தனர். இதுமட்டுமின்றி பல்வேறு குற்ற வழக்குகளை சிறப்பாக கையாண்டு குற்றவாளிகளை பிடித்ததற்காக தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு நரசிம்மபாரதி உள்ளிட்ட போலீசார் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சப் -இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story