நிதிநிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை
நிதிநிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குளித்தலை,
குளித்தலை கீழமுதலியார் தெருவை சேர்ந்தவர் நாகசுந்தரம் (வயது 55), நிதி நிறுவன அதிபர். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. நாகசுந்தரம் நேற்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது மனைவி கண்டித்துள்ளார். இந்தநிலையில் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நாகசுந்தரம் பின்னர் வீட்டுக்கு வந்தபோது தான் விஷம் குடித்து விட்டதாக தனது மனைவியிடம் கூறி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு தமிழரசி கொண்டு சென்றார். அப்போது நாகசுந்தரத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகசுந்தரம் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story