திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் ருத்ர நாட்டியாஞ்சலி


திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் ருத்ர நாட்டியாஞ்சலி
x
தினத்தந்தி 3 March 2022 12:27 AM IST (Updated: 3 March 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

மகாசிவராத்திரியையொட்டி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் ருத்ர நாட்டியாஞ்சலி நடந்தது.

குத்தாலம்:
குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற கோமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தகோவிலில் சிவராத்திரியையொட்டி கோமுக்தீஸ்வரர் சாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 சிவராத்திரியையொட்டி இந்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுதுறையுடன் சேர்ந்து மயிலாடுதுறை அபிநயா நுண்கலை பயிற்சியகம் சார்பில் ருத்ர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூரு, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18-நாட்டிய குழுவினர் கலந்துகொண்டு பரத நாட்டியம் ஆடினர். நிகழ்ச்சியை பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதில் கலந்து கொண்ட நாட்டிய குழுவினர் அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Next Story