மாணவர் பலி


மாணவர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் மாணவர் பலியானார்.

கொட்டாம்பட்டி, 
கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் வீராச்சாமி (வயது16). சிங்கம்புணரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், மோகன்தாஸ் மற்றும் மகாராஜா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளபட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் கொட்டாம்பட்டிக்கு வந்துள்ளனர். அப்போது எதிர் திசையில் சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் வீராச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  விபத்தில் படுகாயமடைந்த 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொட்டாம்பட்டி போலீசார விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story