நடைபயிற்சி சென்ற பெண் வேன் மோதி பலி


நடைபயிற்சி சென்ற பெண் வேன் மோதி பலி
x
தினத்தந்தி 3 March 2022 12:39 AM IST (Updated: 3 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே நடைபயிற்சி சென்ற பெண் வேன் மோதி பலியானார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சாலைநயினார் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி செல்வி (வயது 47). இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். செல்வி தினசரி சாலைநயினார் பள்ளிவாசல்-களக்காடு சாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த வேன் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த அகத்தீஸ்வரம் சதீஷ்குமார் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story