நள்ளிரவில் அகோரிகள் நடத்திய பூஜையால் பரபரப்பு


நள்ளிரவில் அகோரிகள் நடத்திய பூஜையால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 March 2022 12:47 AM IST (Updated: 3 March 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் அகோரிகள் நடத்திய பூஜையால் பரபரப்பு

பொன்மலைப்பட்டி, மார்ச்.3-
திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது.  மகாசிவராத்திரியை முன்னிட்டு இங்கு அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசி கொண்டு ஜெய் அகோர காளி மற்றும் ஜெய் அஷ்ட காலபைரவர் முன் அமைக்கப்பட்ட யாககுண்டத்தில் சிறப்பு யாகம்நடத்தினர். யாக குண்டத்தில் நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றை போட்டனர். பின்னர் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து சங்கொலி எழுப்பியும் ஹர ஹர மஹாதேவ் என முழங்கி மகா தீபாரதனை நடைபெற்றது.இதில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்கள், மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையால் அப்பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story