போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சாத்தூர்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சாத்தூரில் விழா காலங்களில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்,
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சாத்தூரில் விழா காலங்களில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து ெநரிசல்
சாத்தூர் போக்குவரத்து பிரிவில் குறைந்த அளவு போலீசாரே பணியில் உள்ளனர். ஆதலால் முக்கிய பகுதிகளில் மட்டும் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் சிவராத்திரியையொட்டி குலதெய்வ வழிபாடுகளுக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சாத்தூர் நோக்கி பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குலதெய்வ கோவில் வழிபாடுகளுக்காக பக்தர்கள் ஒரே நாளில் சாத்தூரில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடு
இந்த நிலையில் நான்கு வழி சாலை சந்திப்பில் தாயில்பட்டி விலக்கில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை அதிகமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் அந்த பகுதியை கடந்து செல்ல பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமம் அடைந்தனர். இதனிடையே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடவடிக்கை
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் இல்லாததால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.
எனவே இதுபோன்ற விசேஷ நாட்களில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story