பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 March 2022 1:09 AM IST (Updated: 3 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரம் புதிய தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 56). இவரது மூத்த மகன் மகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த மாரியம்மள் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் பேச்சிமுத்து, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story