அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்


அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 3 March 2022 1:10 AM IST (Updated: 3 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் 11 யூனியன்களில் உள்ள தனித் திறன் வாய்ந்த அரசு பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் கலந்துரையாடுவதை கலெக்டர் மேகநாத ரெட்டி வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று வெம்பக்கோட்டை யூனியனை  சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடன் கலெக்டர் மேகநாதரெட்டி அவர்களது லட்சியம் நோக்கம் குறித்து கலந்துரையாடினார். மேலும் அவர்கள் வாழ்வில் மேம்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தினேஷ்குமார், விஜயா கிருஷ்ணன் ஆகியோரும் மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினர். இறுதியில் மாணவர்களுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி அகராதி நூல்களை பரிசாக வழங்கி பாராட்டினார். 


Next Story