உக்ரைனில் இருந்து மேலும் 9 பேர் கர்நாடகம் திரும்பினர்
உக்ரைனில் இருந்து மேலும் 9 பேர் கர்நாடகம் திரும்பியுள்ளனர். இதனால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு: உக்ரைனில் இருந்து மேலும் 9 பேர் கர்நாடகம் திரும்பியுள்ளனர். இதனால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
18 பேர் திரும்பினர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் 20 ஆயிரம் மாணவர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை கர்நாடக மாணவர்கள் 55 பேர் மீட்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் உக்ரைனில் இருந்து நேற்று மேலும் 9 பேர் கர்நாடகம் திரும்பினர். இதன் மூலம் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக இயற்கை பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனர் மனோஜ் ராஜன் கூறுகையில், "உக்ரைனில் சிக்கியுள்ள கர்நாடக மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 18 பேர் கர்நாடகம் திரும்பினர். இன்று (நேற்று) மேலும் 9 பேர் கர்நாடகம் திரும்பியுள்ளனர். இதனால் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கர்நாடக மாணவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
உணவு-குடிநீர்
உக்ரைனில் கர்நாடகத்தை சேர்ந்த மாணவர்கள் 693 பேர் சிக்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அவர்களின் விவரங்களை வெளியுறவுத்துறையிடம் வழங்கியுள்ளோம். அவர்கள் அனைவரையும் மீட்கு பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அங்கு சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்பது மற்றும் உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறையிடம் கூறியுள்ளோம்" என்றார்.
Related Tags :
Next Story