கடலில் கூண்டு வைத்து வளர்த்த மீன்களை பிடிக்கும் பணி
கன்னியாகுமரி அருகே கடலில் கூண்டு வைத்து வளர்த்த மீன்களை பிடிக்கும் பணியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மேலாண் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் கடலில் கூண்டுகள் வைத்து கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கொடுவாமீன்களை பிடிக்கும் பணியை நேற்று படகில் சென்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார். மேலும் பிடிக்கப்பட்ட மீன்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சந்தைப்படுத்த முன் வர வேண் டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி(தேசிய நெடுஞ்சாலை- நிலமெடுப்பு) ரேவதி, துணை இயக்குனர்(மீன்வளத்துறை) காசிநாத பாண்டியன், மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் காளிதாஸ், ராஜேஷ், ஆரோக்கியபுரம் பங்கு தந்தை ரால்ப் கிரான்ட் மதன், லீபுரம் ஊராட்சி தலைவர் ஜெயக்குமாரி லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story