டெய்லர் தீக்குளித்து தற்கொலை
வெள்ளிச்சந்தை அருகே டெய்லர் தீக்குளித்து தற்கொைல செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே செதுவூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 49), டெய்லர். இவருக்கு தொழில் சரிவர நடக்காததால் டெய்லர் வேலையை விட்டு விட்டு மளிகை கடையில் பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தர்மலிங்கம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தர்மலிங்கத்துக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியதாக தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தர்மலிங்கம், சம்பவத்தன்று தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story