கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கினர் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கினர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கினர். ஆண்டிமடம் பகுதியில் கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் தொடங்கினர். இதனையொட்டி அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பெலிக்ஸ் சாமுவேல் சிறப்பு திருப்பலி நிைறவேற்றி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார். இதேபோல, தென்னூர் லூர்து அன்னை ஆலயம், ஆண்டிமடம் மார்த்தினாள் ஆலயம், பட்டனங்குறிச்சி லூர்து அன்னை, கூவத்தூர் அந்தோணியார் ஆலயம், அகினேஸ்புரம் அகினேசம்மாள் ஆலயம், கீழ்நெடுவாய் புனித அன்னம்மாள் ஆலயம், நெட்டலக்குறிச்சி புனித சவேரியார் போன்ற ஆலயங்களில் அந்தந்த பங்குத் தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி தவக்கால சிறப்புரையாற்றினர்.
Related Tags :
Next Story