மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் சாவு


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 3 March 2022 3:15 AM IST (Updated: 3 March 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே உள்ள வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரபு (வயது 29), டெம்போ டிரைவர். இவர், தற்போது மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வடக்கு கோணத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அருள்பிரபு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேயோடு-மேலசங்கரன்குழி சாலையில் சாந்தபுரம் அருகே சென்றபோது, திடீரென  மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்கு நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் அருள்பிரபு தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த அருள்பிரபுவுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

Next Story