‘கையில் பணம் இன்றி உக்ரைனில் தவித்தோம்’


‘கையில் பணம் இன்றி உக்ரைனில் தவித்தோம்’
x
தினத்தந்தி 3 March 2022 7:22 PM IST (Updated: 3 March 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

‘கையில் பணம் இன்றி சிக்கி தவித்தோம்’ என்று உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி கூறினார்.

குன்னூர்

‘கையில் பணம் இன்றி சிக்கி தவித்தோம்’ என்று உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி கூறினார்.

உக்ரைனில் போர்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஆப்பிள் பீ பகுதியை சேர்ந்தவர் சாயிநாத். இவருடைய மனைவி யுகேஸ்வரி. இவர்களது மகள் சாயி சோனு(வயது 21). இவர் உக்ரைன் நாட்டின் வினிஸ்டா பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. 

இரு தரப்பு ராணுவ வீரர்களும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றனர். இதனால் அங்கு படிக்கும் சாயி சோனு உள்பட இந்திய மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

கையில் பணம் இல்லை

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து ஹங்கேரி வழியாக சொந்த நாட்டுக்கு சாயி சோனு திரும்பினார். பின்னர் கோவை வழியாக குன்னூருக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

போர் பதற்றம் ஏற்பட்டதும் கல்லூரி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்டோம். ஆனால் விடுமுறையில் சென்றால் தேர்வு எழுத முடியாது என்றனர். மேலும் பதற்றமான சூழல் நிலவுவது வழக்கமான ஒன்றுதான், போர் வராது என்றும் தெரிவித்தனர். எனினும் போர் தொடங்கிவிட்டது. உடனே 3 மடங்கு அதிகமான தொகை செலுத்தி விமான டிக்கெட் முன்பதிவு செய்தோம். ஆனால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுவிட்டது. இதனால் கையில் பணமின்றி தவித்தோம். இதுகுறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தினேன்.
 
கூட்ட நெரிசல்

இதையடுத்து ருமேனியா நாட்டு எல்லைக்கு வர கூறினர். அங்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தோம். பின்னர் ஹங்கேரி நாட்டு எல்லைக்கு 14 மணி நேரம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பயணம் செய்து வந்தோம். அங்கிருந்து இந்திய விமானம் எங்களை அழைத்து வந்தது. இவ்வாறு சாயி சோனு கூறினார்.


Next Story