தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்


தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்
x
தினத்தந்தி 3 March 2022 7:22 PM IST (Updated: 3 March 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 4 நகராட்சி, 11 பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அதற்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஊட்டி

நீலகிரியில் 4 நகராட்சி, 11 பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அதற்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

294 வார்டு கவுன்சிலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் 108 வார்டு கவுன்சிலர்கள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டு கவுன்சிலர்கள் நேற்று  பதவி ஏற்றனர். 

இந்தநிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 9.30 மணிக்கும், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் மதியம் 2.30 மணிக்கும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படுகிறது. 

ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு

ஊட்டி நகராட்சியில் பெண்(பொது), குன்னூர் நகராட்சி பெண்(பொது), கூடலூர் நகராட்சி பெண்(ஆதிதிராவிடர்), நெல்லியாளம் நகராட்சி பெண்(பழங்குடியினர்) என தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

11 பேரூராட்சிகளில் நடுவட்டம் பேரூராட்சி தலைவர் பதவி பொது(ஆதிதிராவிடர்) தவிர மீதம் உள்ள 10 பேரூராட்சிகளிலும் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. பெரும்பான்மையாக உள்ளதால் ஒருமனதாக தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. 

வேட்பாளர்கள் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஊட்டி நகராட்சி- வாணீஸ்வரி
குன்னூர் நகராட்சி- ஷீலா கேத்தரின் 
நெல்லியாளம் நகராட்சி- சிவகாமி
கூடலூர் நகராட்சி- வெண்ணிலா
அதிகரட்டி பேரூராட்சி- பேபிமுத்து
உலிக்கல் பேரூராட்சி- ராதா
ஓவேலி பேரூராட்சி- சித்ராதேவி
கீழ்குந்தா பேரூராட்சி- நாகம்மாள்
கேத்தி பேரூராட்சி- ஹேமமாலினி
கோத்தகிரி பேரூராட்சி- மு.பூமணி
சோலூர் பேரூராட்சி- கவுரி
தேவர்சோலை பேரூராட்சி- வள்ளி
நடுவட்டம் பேரூராட்சி- கலியமூர்த்தி
ஜெகதளா பேரூராட்சி- பிரமிளா வெங்கடேஷ்.
மேலும் பிக்கட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரசை ேசர்ந்த எம்.சந்திரலேகா போட்டியிடுகிறார்.


Next Story