தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் நாளை(சனிக்கிழமை) ஆய்வு
தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 17 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் நாளை (சனிக்கிழமை) ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு மேற்கொள்கிறார்.
ரெயில் பாதை
மதுரை - தூத்துக்குடி இடையே புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
முதல் கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து மேலமருதூர் வரை 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரெயில் பாதையை பெங்களூரு தென்சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் நாளை (சனிக்கிழமை) ஆய்வு செய்கிறார்.
அவர் காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு ரெயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்கிறார்.
எனவே பொதுமக்களும், புதிய ரெயில் பாதை அருகே வசிப்போரும், அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரெயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என ரெயில்வே துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆய்வு
இந்த நிலையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலான புதிய ரெயில் பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவரிடம் தூத்துக்குடி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க செயலாளர் பிரமநாயகம் ஒரு கோரிக்கை மனுகொடுத்தார்.
அந்த மனுவில், தூத்துக்குடி-கோவை இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் தாம்பரம்-ஐதராபாத் சார்மினார் அதிவிரைவு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், நெல்லை-பாலக்காடு பாலருவி விரைவு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடிக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், மீளவிட்டான்-தூத்துக்குடி இரட்டை ரெயில் வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story