ராஜினாமா கடிதம் அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


ராஜினாமா கடிதம் அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 March 2022 8:11 PM IST (Updated: 3 March 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடும் கும்பலிடம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் ராஜினாமா கடிதம் அனுப்பிய போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

எட்டயபுரம்:
ஆடு திருடும் கும்பலிடம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் ராஜினாமா கடிதம் அனுப்பிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
லஞ்சம் கேட்டதாக ஆடியோ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கங்கைநாத பாண்டியன்.
இவர் ஆடும் திருடும் கும்பலை சேர்ந்தவர்களை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்காமல் இருப்பதற்காக, லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ராஜினாமா கடிதம்
இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே திட்டமிட்டு ஆடியோவை சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளதாகவும்,
எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவர் எடிட் செய்து வெளியிட்ட ஆடியோ குறித்து, என்னிடம் கருத்து கேட்காமல் ஆயுதப்படைக்கு மாற்றியதால் மன உளைச்சலில் இருப்பதால் பணியில் தொடர விருப்பமில்லை என்றும் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் விளக்கம் அளித்து, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.க்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு கடிதத்தை விளாத்திகுளம் காமராஜர் நகரில் கங்கைநாத பாண்டியன் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மூலமாக போலீசார் ஒட்டினர்.

Next Story