தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி


தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி
x
தினத்தந்தி 3 March 2022 8:19 PM IST (Updated: 3 March 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் மாநகராட்சியினரால் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது

தூத்துக்குடி:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் மாநகராட்சியினரால் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
பஸ் நிலையம்
தூத்துக்குடி மாநகர பகுதியில் இயங்கி வந்த பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
காலப்போக்கில் இந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சேதம் அடைந்தன.
குடிநீர் வசதி
அதே போன்று பஸ் நிலையத்தின் மைய பகுதியில் பயணிகள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்படாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் மேற்கொண்டனர். இதனால் செயல்படாமல் இருந்த குடிநீர் நிலையம் அருகே குடிநீர் குழாய்களை அமைத்து பொது மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story